அரசியல்உள்நாடு

அக்கரைப்பற்று சபைகளுக்கு எஸ்.எம். சபீஸ், சிராஜ்தீன், முபாஸ் ஆகியோரை அனுப்ப மக்கள் காங்கிரஸ் மத்திய குழு தீர்மானம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தது.

ஒவ்வொரு கட்சியிலும் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குதல் என்ற வாத பிரதி வாதங்கள் எழுந்துள்ள இவ்வேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக யாருடைய பெயர் முன்மொழியப்படும் என்ற எதிபார்ப்பு இருந்து வந்தது.

நேற்று மாலை (2025.05.18) எஸ் எம் சபீஸ் தலைமையில் கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழு அக்கரைப்பற்று மாநகர சபைக்கு அக்கரைப்பற்றின் அனைத்துப்பள்ளி வாசல்களின் முன்னாள் தலைவர் எஸ்.எம் சபீஸ் அவர்களையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னாள் பணிப்பாளர் பொறியியலாளர் என்.ரீ.எம். சிராஜுடீன் அவர்களையும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு எம்.எம். முபாஸ் அவர்களையும் தெரிவு செய்து கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அக்கறைப்பற்று அரசியல் பயணத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சுமார் 7500 வாக்குகளைப் பெற்றுள்ள வேளையில் புதிதாக அக்கரைப்பற்று அரசியல் பரப்பில் கால் பதித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2500 வாக்குகளைப் பெற்றது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் – செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடல்.

 வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை