அரசியல்உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு 26,27,28.09.2025 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

அக்கட்சியின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ் அமீர் அலி மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இச்செயலமர்வின் வளவாளர்களாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. ஐங்கரன் மற்றும் விவசாய அமைச்சின் பிரதான கணக்காளர் திரு. உதய ராஜன் ஆகியோர் தொழிற்பட்டருந்தனர்.

முதலாவது நாள் செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் நிதி சார் நடைமுறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில் இலங்கை பூராகவும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

மன்னாரில் அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் – நீதிமன்றின் உத்தரவு

editor

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

“ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவ மோட்டார் சைக்கிள்களை அனுப்பியது தவறு”