உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிவிப்பு

ரமழான் மாதத்தில் தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம் அப்துல் ஸமத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணையின் அடிப்படையில், தற்போதுவரை அமுலில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், புவியியல் மாற்றங்கள் பாதைகள் விஸ்தரிப்பு மற்றும் உயர் மாடிக் கட்டிடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில நாட்களில் மக்ரிப் தொழுகையின் அதான் சொல்லப்படும் நேரத்தில் சூரியன் தென்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, குறித்த விடயத்தை மக்களுக்கு அறிவூட்டுவதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

ஆகவே, கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இருப்பவர்கள் மக்ரிப் தொழுகையின் அதானை கலண்டரிலுள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துடன் ஒரு நிமிடத்தைக் கூட்டி அந்நேரத்தில் அதான் சொல்லி நோன்பு திறக்கமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்து – ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்!

editor

UNP – SJB கட்சிகளுக்கிடையில் இன்று மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை

editor

அரசுக்கு மின்சார சபை ஊழியர்கள் சிவப்பு எச்சரிக்கை