உள்நாடுபிராந்தியம்

ஈஸி கேஷ் முறையில் போதைப்பொருள் விற்பனை – இளைஞன் ஒருவன் கைது

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

இரண்டு இளைஞர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார்.

சந்தேக நபரான இளைஞன் ஈஸி கேஷ் அமைப்பு மூலம் ரூ. 6,000 செலுத்தி போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்வதற்காக இளைஞனின் தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

-க.கிஷாந்தன்

Related posts

தேசிய சபை வியாழன்று கூடுகிறது

சிங்கள திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீ லால் அபேகோன் காலமானார்

ரயில்வே பணியாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது