உள்நாடுபிராந்தியம்

யானை தந்தங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.

மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபருக்குச் சொந்தமான வயலில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், யானை தந்தங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் சுமார் ஒரு அடி நீளம் கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களும், சந்தேக நபரும் இன்று (15) கஹடகஸ்டிகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று பார்க்கலாம்

editor

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்