விளையாட்டு

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதான தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்தின் கூரைக்கு மேல் ஏறி உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் , 10 வருடமாக தொழில் புரியும் எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமது சேவையினை நிரந்தரமாக்கும் வரையில் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வுள்ளாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீச்சல் போட்டிகளிலிருந்தும் இலங்கை வெளியேறியது

சூதாட்ட சர்ச்சை; மூன்று வீரர்கள் அணியிலிருந்து நீக்கம்

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3வது வீரர்