வகைப்படுத்தப்படாத

வாழைப்பழ பொதி தொடர்பில் அமைச்சர் கயந்த CID யில் முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக வாழைப்பழங்களை பொதியிட்டு அதில் தனது புகைப்படம் மற்றும் பெயரினை உள்ளிட்டு விநியோகித்துள்ளதாக பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அந்த பொதியில் “காலியின் முதன்மையானவருடன் முன்னோக்கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அமைச்சரின் தொலைப்பேசி இலக்கம் மற்றும் காலி -தல்கஸ்வல பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் தொலைப்பேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த வீட்டு தொலைப்பேசி இலக்கம் பொய்யானது என எமது செய்திப்பிரிவு மேற்கொண்ட தேடுதலில் தெரியவந்துள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/162876_01.jpg”]

Related posts

படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

சவுதியுடனான உறவுகள் தொடரும்…

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின