வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி கன்பரா தாவரவியல் பூங்காவிற்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்ரேலியாவிற்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு இன்று விஜயம் செய்தார்.

கன்பரா முதலமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி கன்பராவின் சட்ட மா அதிபர் கோல்டன் றம்சே மற்றும் பூங்காவின் பதில் கடமைபுரியும் நிறைவேற்று முகாமையாளர் ஸ்கொட் ஸட்லியும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அவுஸ்திரேலியாவுக்கான தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி பூங்காவில் மகோகனி மரக்கன்று ஒன்றை நாட்டினார்.

இந்த நிகழ்வில் கன்பராவின் சட்ட மா அதிபர் ரம்சே தெரிவிக்கையில் சுற்றாடல்துறை அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயம் உண்மையிலேயே ஒரு கௌரவம் எனத் தெரிவித்தார்.

2003ம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயின் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து இப்பூங்கா தாபிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நிறைவேற்று முகாமையாளர் சேட்லர், தற்போது இங்கு 44 ஆயிரம் விதைகள் நடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இப்பூங்கா மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான ஒரு தனித்துவமான சுற்றாடல் நிலையமாக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இத்தேசிய பூங்காவில் உள்ள இரண்டு காடுகள் சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்தவையாகும். உலகின் மிகப்பெரும் அரிய மரங்களைக் கொண்ட பூங்காவாகத் திகழும் இங்கு 250 ஹெக்டெயார் நிலப்பரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு வைக்கப்பட்டிருக்கும் விருந்தினர் புத்தகத்திலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.

Related posts

டிக் டாக் செயலிக்கு தடை

ඇමෝනියා කිලෝ 150ක් ප්‍රවාහනය කළ පුද්ගලයන් සිව් දෙනෙක් අත්අඩංගුවට

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்