விளையாட்டு

குமார் சங்ககாரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவிற்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள கௌரவம் தொடர்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கட் போட்டிகள் தொடர்பில் சங்ககார செய்த சேவைக்காக அவரின் படம் அண்மையில் லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அணியில் விளையாடிய 3 வீரர்களின் படம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் படம் இலங்கை சார்பில் காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர் மஹேலா ஜெயவர்த்தனவின் படம் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குமார் சங்ககாரவின் படமும் லோர்ட்ஸ் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கையின் பெருமை மேலும் அதிகரித்துள்ளது.

[ot-video][/ot-video]

Related posts

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து உஸ்மான் நீக்கம்

இருபதுக்கு – 20 உலக கிண்ண குறித்து இன்று இறுதி முடிவு

இங்கிலாந்து மகளிர் அணி இலங்கைக்கு