உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Related posts

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

ஹாங்காங்- ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் 4 பேர் இராஜினாமா