உலகம்சினிமா

முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை – பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு

ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் இருவரின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இவரது மனைவிக்கு பெயர் சாய்ரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் திகதி திருமணம் செய்தனர்.

இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இதில் அமீன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீப காலமாக ஏஆர் ரஹ்மானுடன் அடிக்கடி அமீன் மேடைகளில் தோன்றி வருகிறார்.

இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர் வந்தனா மற்றும் அசோசியேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்

“திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவெளியை தொடர்ந்து வலி மற்றும் வேதனையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் 2 மகள்களில் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 2வது மகள் ரஹிமா, மகன் அமீன் ஆகியோருக்கு திருமணம் ஆகவில்லை.

இத்தகைய சூழலில் தான் மனைவி சாய்ரா பானு பிரிவதாக கூறியுள்ளதால் ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Related posts

ஹெய்ட்டி பலி எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

கிரிப்டோகரன்சியில் அமெரிக்காவை முந்திய இந்தியா

கொரோனா வீரியம் : புதைக்க இடமின்றி காத்திருக்கும் சடலங்கள்