அரசியல்உள்நாடு

நான் உயிரோடு இருக்கும் வரை புத்தளத்தில் போட்டியிட மாட்டேன் – ரிஷாட்

புத்தளத்தை புத்தளம் மக்கள் தான் ஆள வேண்டும் எனவும் நான் உயிரோடு இருக்கும் வரை புத்தளத்தில் போட்டியிட மாட்டேன் எனவும் நேற்றைய (06) தினம் புத்தளம் வெட்டுக் குளம் சந்தியில் இடம் பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் மக்கள் அன்சாரி தோழர்கள் போல், நாம் வடக்கிலிருந்து இங்கு வந்த போது அவர்களது வீடுகளை, பள்ளிவாசல்களை, பாடசாலைகளை, எமக்கு தந்து எம்மை அரவணைத்தவர்கள், புத்தளத்திற்கும், புத்தளம் மக்களுக்கும் வடக்கை பூர்வீகமாக கொண்ட நானும், எமது சமூகமும் எப்போதும் நன்றிக் கடன் உள்ளவர்களாக இருப்போம் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் புத்தளம் சமூகத்திற்கு என்னால் முடிந்த அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தேன். இன்ஷா அல்லா இனிவரும் காலங்களிலும் முயற்சிப்பேன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் புத்தளம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடமாட்டேன் அதில் உறுதியாக இருக்கிறேன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக புத்தளத்தை சேர்ந்த ஒருவரே வர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

நான் உயிரோடு இருக்கும் வரை எனது கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரையோ, அல்லது வன்னி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரையோ புத்தளத்தில் களமிறக்க மாட்டேன் எனவும் நீங்கள் வாக்களித்து தெரிவு செய்யப் போவது என்னையல்ல புத்தளத்தைப் பூர்வீகமாக் கொண்ட, புத்தளம் மீது அதிக அக்கறை கொண்ட, எப்போதும் புத்தளத்தை நேசிக்கின்ற (NTM.தாஹிர், MHM.முஹம்மத், SHM.நியாஸ்) ஆகிய புத்தளம் மாவட்ட சிறுபான்மை வேட்பாளர்களுக்கு என்பதை மறந்து விடாதீர்கள் எனவும் ஆகவே அன்பான எனது புத்தளம் மாவட்ட உறவுகளே..! உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள் நீங்கள் ஒற்றுமைபட்டு வாக்களித்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளலாம் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான தாஹிர், முஹம்மது, நியாஸ் கலந்துகொண்டதோடு பல அரசியல் வாதிகள் புத்தளம் மாவட்ட மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Related posts

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – அரசாங்கம்

மேல் மாகாணத்தில் 2,558 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை

தவணைப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த திட்டம்