வகைப்படுத்தப்படாத

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.

இதன்போது அரசியல் யாப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் கருத்துக்களை முன்வைப்பதற்காக, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த குழு சுதந்திர கட்சியின் பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு செய்து, இறுதி அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

තැපැල් සේවක වැඩ වර්ජනය අද 4.00ට අවසන්

முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

செல்லப்பிராணி வளர்ப்பவர்களா நீங்கள்?