உலகம்சூடான செய்திகள் 1

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது..

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PIBA வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்

Related posts

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும்-அமைச்சர் ரிஷாட்

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன