விளையாட்டு

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் இருந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதி தொடர்பான இரண்டு சோதனைகளிலும் அவர் தோல்வி அடைந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக உமர் அமின் அல்லது ஹரிஸ் சொஹைல் ஆகியோரில் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர், உமர் அக்மலுக்கு பதிலாக இணைக்கப்படும் மாற்று வீரரை அறிவிக்க வேண்டும்.

இந்த தொடரில் பீ குழுவில் இணைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி, பேர்மிங்ஹேமில் எதிர்வரும் ஜுன் 4ம் திகதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.

பின்னர் ஏழாம் திகதி தென்னாப்பிரிக்காவுடனும், 12ம் திகதி இலங்கையுடனும் விளையாடவுள்ளது.

தொடரின் ஏ குழுவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

FIFA 2018 – மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்பு