அரசியல்உலகம்

இலங்கையின் புதிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

தமிழக மீனவா்களின் உரிமையை நிலைநாட்ட இலங்கையின் புதிய அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவா்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறபோது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடா் நிகழ்வுகளாகிவிட்டன.

பூம்புகாரைச் சோ்ந்த 37 மீனவா்களை செப்டம்பா் 21-இல் கைது செய்துள்ள இலங்கைக் கடற்படை, அவா்களது மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

மீனவா்களுக்கு அதிக அளவில் அபராதமும் விதித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், மீனவா்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடைச் சட்டத்தின்படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நான்காவது தடுப்பூசிக்கு இஸ்ரேல் தயார்

பாக்கிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா