நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் எண்ணை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும், ஏனைய வேட்பாளர்கள் யாருக்காவது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
யட்டியாந்தொட்டை பகுதியில் இடம்பெற்ற “திலித் கமட” மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “நாங்கள் ஒரு மூலோபாய திட்டத்தை முன்வைத்தோம். அதன் மூலம் உங்கள் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை ஒவ்வொன்றாக கூறினோம்.
அந்த மாற்றத்தோடு பணம் கிடைக்கும் வழிமுறைகளையும் கூறினோம். நாங்கள் முன்வைத்த திட்டத்தை விமர்சித்து யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நாங்கள் இந்த புத்தகத்தில் முன்மொழிந்துள்ளோம். நவீன டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்தி சமமான முறை. உங்கள் பிறந்தநாளில் நீங்கள் பெறும் இந்த டிஜிட்டல் எண்ணைக் கொண்டு, நீங்களும் நானும் ஒரே நாளில் இந்த நாட்டில் சமமான குடிமக்களாக மாறுவோம்.
நான் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த டிஜிட்டல் எண்ணை உங்களால் வழங்க முடியுமா என உறுதியளிக்கவும்” என்றார்.