அரசியல்உள்நாடு

இலவசக் கல்வியை முழுமையாக பாதுகாப்பதோடு மாற்றுக் கல்விக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் – சஜித்

தொழில் ரீதியான போதனையாளர்களுடைய செயற்பாடுகள் தற்போதைய கல்வி முறையோடு பொருந்த வேண்டும். இலவச கல்விக்காக நாம் முழுமையாக செயல்படுவோம். இலவச கல்வியை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உயர் வர்க்கத்தில் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே இலவச கல்வியை முழுமையாக பாதுகாப்பதோடு மாற்றுக் கல்விகளுக்கான வாய்ப்புகளையும் பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சிறந்த தரத்திலான கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளமையால் மாற்று வழிமுறைகளுக்கு செல்ல வேண்டாம் என்று தடை செய்ய முடியாது. மாணவத் தலைமுறைக்கு கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பலப்படுத்த வேண்டும். இலவசக் கல்வி முறையை பலப்படுத்துவதோடு மாற்றுக் கருவிகளுக்கான சந்தர்ப்பத்தையும் பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் செப்டம்பர் 11 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் ரீதியான போதனையாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தொழில் ரீதியான போதனையாளர்களின் தொழில் செயற்பாடுகளின் போது அறிவை வளர்த்துக் கொள்வதா அல்லது குறைத்துக் கொள்வதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் போது அவர்களுடைய பங்களிப்பு பயனுள்ளதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பணியாளர் படையணியின் ஆளுமைகளை விருத்தி செய்ய வேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது நாட்டிற்கு வருகின்ற போது பணியாளர் படையணியின் தேர்ச்சி திறமை ஆளுமை என்பவற்றை கருதிற் கொள்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பாகவே இந்தியா தமது நாட்டின் இளைஞர்களுடைய ஆளுமையையும் தேர்ச்சியையும் திறமைகளையும் மேம்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப கல்வியை பலப்படுத்தினார்கள்.

அதனால் அமெரிக்கன் சிலிக்கான் வேலி வங்கி கட்டமைப்பில் அதிகமான இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொருளியலாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வித்துறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்காக கல்வித்துறையில் விசேட மாற்றங்கள் அவசியமாகின்றது. சில துறைகளை தவிர எமது நாட்டில் உள்ள சில துறைகளுக்கு தொழிற்சந்தையில் சிறந்த இடம் கிடைப்பதில்லை.

எனவே சர்வதேச தொழிற்சந்தைக்கு தேவையான துறைகளுக்கு ஊழியர்களை வழங்குகின்ற விதத்தில் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

மாற்றுக் கல்வித் துறைக்கான சந்தர்ப்பத்திற்கும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலதிக வகுப்புகளை தடை செய்வது அதற்கான தீர்வல்ல. தற்போதுள்ள சூழ்நிலையில் இலவச கல்வி பாதுகாக்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தனியார் கல்வித் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பிள்ளைகளும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சென்றார்கள்.

தனியார் கல்வித் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரின் பிள்ளைகளும் தனியார் கல்வியைப் பெற்று, தனியார் பல்கலைக்கழகங்களிலே பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்கின்றார்கள்.

அரசியலில் ஈடுபடுகின்ற போது ஒரு நிலைப்பாட்டிலும் குடும்ப உறுப்பினர்களுக்காக வேறு ஒரு நிலைப்பாட்டை பெற்றுக் கொள்வதும் பொருத்தமான விடயம் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவர்கள் ஏனையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை விட்டு முதலில் தான் சரியானதை செய்ய வேண்டும். இப்பேற்பட்டவர்களுடைய இரு தரப்பு சிந்தனையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு அரசினால் விசேட அறிவிப்பு

IMF கடன் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் புதிய தகவல்