அரசியல்

நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது. நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவுப் பெறும் வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தனது செயலாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த 18 ஆம் திகதி குறிப்பிட்ட நிலையில் 19 ஆம் திகதி சட்டமூலத்தை ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிட்டார்.

ஜனாதிபதியின் செயற்பாட்டினால் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன்இசர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் மீது முறையற்ற வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

கடினமான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் பல மில்லியன் ரூபா செலவு செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளதா?

சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது.நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும்.மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா?

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.10 ஆண்டுகள் நிறைவுப் பெறவுள்ள நிலையில் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்  என்று குறிப்பிடுகிறார்.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் பல மில்லியன் ரூபா செலவு செய்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது பயனற்றது என்றார்.

– இராஜதுரை ஹஷான்

Related posts

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவில் எந்த குழப்பமும் இல்லை – சுமந்திரன் எம்.பி

editor

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம் – சஜித்

editor