அரசியல்

22வது திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவைத்தலைவர் சுட்டிக்காட்டியிள்ளார்.

22வது அரசியலமைப்பு  திருத்தம் தற்போதைக்கு வராது என நினைக்கிறேன்.

அடுத்த அமர்விற்கான நிகழ்ச்சி நிரலை நேற்று தயாரித்தேன், அது அதில் இல்லை

இந்த திருத்தம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனால் தேர்தல் பாதிக்கப்படாது. தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்தாகும் என்றார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைக்கால மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடு

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?