அரசியல்

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்.

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் நேற்று(19) இடம்பெற்றது.

இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ராஜதுரை மற்றும் போசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Related posts

ஐ.ம.சக்திக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் டயானா கமகே.

ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்.

கடவுச்சீட்டுக்கான வரிசை – ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் – முஜிபுர் எம்.பி

editor