அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நியமனங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக சட்டத்தரணி அலரி ரிபாஸ் நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் மருதமுனைக்கான அமைப்பாளராக வை.கே. ரஹ்மானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக்கடிதங்களை கடந்த வெள்ளிக்கிழமை (12) கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் வழங்கிவைத்தார்.

இதன் போது, கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அப்துல் ரஸாக் (ஜவாட்),
கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்ஸில், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான அஷ்ரப் தாஹீர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஆசிரியர் காதர் , உயர்பீட உறுப்பினர் கலீல் முஸ்தபா உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.

Related posts

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை”

வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையத்தை நாடவும்

editor

அரச நிதியில் ஹஜ் சென்ற எம்பிமார்களும், குடும்பங்களின் தகவலும் அம்பலம் !