அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு – தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர் உட்பட மூவரடங்கிய நீதியரசர் குழாம்ஆராய்ந்தது பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பி அதனை அங்கீகரிக்கும் வரை  ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதாக தீர்ப்பளிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜயதாச அறிவிப்பு.

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்