உள்நாடு

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண் கைது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியபோதே கைது செய்யப்பட்டள்ளார்.

இவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், இன்று அதிகாலை 5.50 மணியளவில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டார்.

இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 20,000 “மான்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாத்து முறையான அரசாட்சியை முன்னெடுப்போம் – சஜித்

editor

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

சாக்லேட் ஒன்றினுள்- மனித கைவிரல் கண்டுபிடிப்பு : மஹியங்கனையில் சம்பவம்