வணிகம்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் நட்புறவின் அடிப்படையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் இந்த வர்த்தக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக சந்தையில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சந்தை வெற்றி அளித்ததை தொடர்ந்தே மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த வர்த்தக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘சிலோன் டீ’ சீனாவுடன் கைகோர்த்தது

நெல்லை உடனடியாக அரிசியாக மாற்ற அனுமதி

கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்