விளையாட்டு

நேற்றைய I P L போட்டியின் முடிவுகள் இதோ

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

53வது போட்டியாக இடம்பெற்ற போட்டியில் குஜராத் லையன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் லையன்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதனிடையே 54வது போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும் பங்குகொண்டன.

இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி 9 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த கொல்கட்டா அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனிடையே, சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலா மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நிறைவின் போது ஒரு விக்கட்டை இழந்த நிலையில் 7 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக பாகிஸ்தான் தமது முதலாது இனிங்சில் 376 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இனிங்சிற்காக 247 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

பாகிஸ்தான் அணி தமது இரண்டாவது இனிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மந்தனாவை பார்க்க 1270 கிமீ. தாண்டி வந்த சீன ரசிகர்!

இராணுவத் தளபதியின் அறிக்கை பொய்யானது என அவுஸ்திரேலியா தெரிவிப்பு

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)