வகைப்படுத்தப்படாத

கடைக்கு சென்ற என் அம்மா எங்கே ?தனது தாயை தொலைத்த சிறுமியின் கதறல்

(UDHAYAM, COLOMBO) – முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியொருவர் வவுனியாவில் கடைக்கு வேலைக்கு சென்றவேளை காணாமல் போன தனது தாய் எங்கே என கேள்வி எளுப்பியுள்ளார்

கடந்த 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர்  தனது 3 பிள்ளைகளையும் வழப்பதற்க்காக வறுமை காரணமாக வவுனியா கச்சேரியில் கன்ரினில் வேலைக்கு சென்றவர் 2010.07.20 ம் திகதி வேலைமுடித்து வீடுதிரும்பியவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை அவர் எங்கே என மகள் கேள்விஎளுப்பியுள்ளார்

இதேவேளை தனது மகள் காணாமல் போனதிலிருந்து இன்று வரை அவருடைய பிள்ளைகளை வழக்க பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கச்சான் வித்தே பிள்ளைகளை வழப்பதாகவும் தனக்கும் 66 வயதாகிவிட்டதாகவும் தன்னால் உழைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் எனவே தனது மகளை விரைவில் தன்னிடம் ஒப்படைக்குமாறும் தாயார் கோரியுள்ளார்.

Related posts

New hotlines to inform police about disaster situation

காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து