உள்நாடுஒரு தேடல்கட்டுரைகள்சூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாதவளைகுடா

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –     வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தவிடத்தை கூறினார்.

இதற்கமைவாக, வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

உலக தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், மூன்றாம் நிலை கல்வி மூலம் உள்ளூர் மற்றும் உலக சந்தைக்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் வெலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு சமூக காப்புறுதி முறையை அறிமுகப்படும். அதன்படி, ஊழியர்ககள் வேலை இழந்தால்இ அவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் மேலும் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Video

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி – கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை