(UTV | கொழும்பு) – சுமார் இரண்டு வாரங்களாக நாட்டில் பெட்ரோல் கையிருப்பில் இருந்த போதிலும், டீசல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போதுள்ள இந்த டீசல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
எவ்வாறாயினும், தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோல் கையிருப்பு உள்ள போதிலும், பெரும்பாலானவற்றில் டீசல் இல்லை என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்று (29) இலங்கை வந்தடைந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், டீசல் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்காக மூன்று டீசல் கப்பல்கள் அடுத்த சில நாட்களுக்குள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 01, ஜூன் 14 மற்றும் ஜூன் 16 ஆகிய திகதிகளில் டீசல் கப்பல்கள் வர உள்ளன.