வகைப்படுத்தப்படாத

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இரண்டு பேர் களுபோவில மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

12 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுள், 12 வயது சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவரை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல தமக்கு உதவி செய்யுமாறு குறித்த சிறுமியின் தந்தை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சம்பவத்தில் காயமடைந்த அதே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிலியந்தலையில் உள்ள அரச வங்கியொன்றுக்கு முன்னாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நின்றுகொண்டிருந்த குறித்த மூன்று சிறுவர்களும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

Several dead as gunmen storm Somali Hotel

மஸ்கெலியாவில் லொறி விபத்து இருவர் காயம்