வகைப்படுத்தப்படாத

வடகொரியாதொடர்பில் கடுமையான தீர்மானம் எடுத்துள்ள அமெரிக்கா!!

(UDHAYAM, COLOMBO) – வடகொரியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன், வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களை தடுக்கும் வகையில் தூதரக மட்டத்தில் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் செனட் சபை உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க உயர் மட்ட தளபதிகளுடன் ஆலோசித்து பசுபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு திட்டம் ஒன்றை தென்கொரியாவுடன் இணைந்து தயாரித்தது.

அத்துடன் பசுபிக் தீபகற்பத்தில் அமெரிக்க யுத்த கப்பல்கள் பாரியளவில் நிலை கொண்டுள்ள நிலையில் அண்டை நாடுகள் யுத்த அச்ச நிலையில் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

More rain in Sri Lanka likely

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை