வகைப்படுத்தப்படாத

கழிவு முகாமைத்துவம்:வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பான விபரங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UDHAYAM, COLOMBO) – கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 5 வருட காலப்பகுதியில் வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பான விபரங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகளை பெற்று கொள்வதற்காக மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவுள்ள பணத்தை ஒரே தடவையில் வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்

திரிபோஷா எடுத்து வருவதாக கூறி சென்ற இளம் பெண்! வீடு திரும்பவில்லை

உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம்