வகைப்படுத்தப்படாத

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

(UDHAYAM, COLOMBO) – மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் கிரிக்கட் குழாமில் 3 ஆண்டுக்கு பின்னர் கிரன் பவல் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்கான 13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அறிமுக வீரர்களான விசோல் சிங் மற்றும் சிம்ரொன் ஹெட்மயர் ஆகியோருடன், கிரன் பவலும் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் விளைவாக அவர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த வருடம் ஐக்கிய ராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய மார்லன் சமுவேல், டெரன் ப்ராவோ மற்றும் லியோன் ஜோன்சன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜேன் ஹொல்ட்டர் தலைமையிலான டெஸ்ட் குழாமில், Devendra Bishoo, Jermaine Blackwood, Kraigg Brathwaite, Roston Chase, Miguel Cummins, Shane Dowrich (wk), Shannon Gabriel, Shimron Hetmyer, Shai Hope, Alzarri Joseph, Kieran Powell, மற்றும் Vishaul Singh  ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

நின்று கொண்டிருந்த விமானத்துடன் பயணிகள் விமானம் மோதியதால் பரபரப்பு -(VIDEO)

இரண்டு சிறுமிகள் மாத்தளையில் கைது

පස්වරුවේ කැබිනට් රැස්වීමක්