வகைப்படுத்தப்படாத

அணல் காற்றினால் 21 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வெயிலின் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கோடை வெயில் தாக்கம் மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் பல மாநிலங்களில் வெயில் 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் காணப்படுவதால் வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் தாக்குபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

தெலுங்கானாவில் ஐதராபாத், ஆதிலாபாத், நிஜாமாபாத், திருப்பதி, நல் கொண்டா, கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் 110 டிகிரிக்கு வெப்பநிலை காணப்படுகின்றது.

சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் அனல் காற்று வீசுவதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர தயங்குகின்றனர்.

18 மாவட்டங்களில் அணல் காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் பொதுமக்கள் நண்பகல் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலையோர வியாபாரிகள், வணிகர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வேலூர், மதுரை, நெல்லை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

Related posts

எதிர்வரும் 30ம் திகதி வேலை நிறுத்தம்

பிரதமருக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்