07 யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள்

07 யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள்

(UTV|COLOMBO) – ஹபரணை – திகம்பத்தஹ, தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யானைகளின் உடல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பின்னர் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யானைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக, யானைகளின் உடல் மாதிரிகள், பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )