அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்

அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTVNEWS|COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 04 ஆம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என அந்த குழு குறிப்பிட்டுள்ளது.

சம்பள பிரச்சினை, கொடுப்பனவுகள் உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்க தவறியுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )