வகைப்படுத்தப்படாத

கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து உபகரணங்களும் பொசாசோ துறைமுகத்திற்கு

(UDHAYAM, COLOMBO) – சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆரிஸ் 13 கப்பலில் உள்ள எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சோமாலிய பொசாசோ துறைமுகத்திற்கு வழங்கப்படவுள்ளன.

அந்த கப்பலின் முதன்மை அதிகாரி ருவன் சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பல் இன்றைய தினம் பொசாசோ துறைமுகத்திலிருந்து ஜிபுட்டை சென்றடையவுள்ளதாக அவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எட்டு பேர் அடங்கிய குறித்த கப்பல் நேற்றைய தினம் பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தது.

அந்த கப்பலில் பிரவேசித்தவர்களுக்கு சிறந்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் சோமாலிய உப ஜனாதிபதி கலந்து கொண்டிருந்ததாகவும் கப்பலின் முதன்மை பொறியிலாளர் ஜயந்த களுபோவில தெரிவித்துள்ளார்.

Related posts

Interim Order issued on garbage containers

රුපියලේ අගය පහත වැටිමක්

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය