வகைப்படுத்தப்படாத

நுவரெலியாவில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதம்

(UDHAYAM, COLOMBO) – நுவரெலிய நானுஓயா கர்னட் தோட்டத்தில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 109 பேர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நுவரெலிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது அவர்கள் வேறு ஒரு தோட்டத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை முதல் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

அமெரிக்கா விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் நாடு திரும்பினார்

பிரதமர் நாடு திரும்பினார்