வகைப்படுத்தப்படாத

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டிலுள்ள பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய , வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களன் பல இடங்களில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பொழியும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு கரையோரங்களில் காலை வேளையில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது வலுவான காற்றும் வீசக்கூடும் என்பதனால் இடி மின்னல் தொடர்பாக மக்கள் அவதானமாகச் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

Related posts

கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது

இடியுடன் கூடிய மழை

Sri Lanka’s Kumar Dharmasena, Ranjan Madugalle named Officials for World Cup Final