வகைப்படுத்தப்படாத

மருத்துவ தாதிமார்கள் இன்றும், நாளையும் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ தாதிமார்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அரச சேவையாளர்களின் ஒன்றிணைந்த தாதிமார் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

சுகயீன விடுமுறையின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வேதன கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவு, வருடாந்தம் வழங்கப்படுகின்ற சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், அரசியல் பின்னணியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லையென அரச தாதிமார் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

முகப்பருவால் வந்த தழும்புகளை நீக்க என்ன செய்யலாம்?

බස් ගාස්තු සංශෝධනයක් සිදුවිය යුතුයි – ගැමුණු විජේරත්න