கேளிக்கை

‘விஜய் 61’ படத்திற்கு இதைவிட சூப்பரான தலைப்பு பொருந்துமா?..கசிந்த தகவல்

(UDHAYAM, CHENNAI) – இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14 திகதி ஆம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு ‘மூன்று முகம்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி என மூன்று பிரபலங்கள் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு ‘மூன்று முகம்’ டைட்டிலை தவிர வேறு டைட்டில் பொருத்தமாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

இருப்பினும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக டைட்டிலை அறிவிக்கும் வரை பொறுமை காப்போம் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்கின்றனர். ‘பாகுபலி’ புகழ் விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.

Related posts

பிரபல “ஹரி பொட்டர்” ஹாஸ்ய நடிகர் உலகை நீத்தார்

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால்

200 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா