16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடல்மார்க்கமாக இலங்கைக்கு

16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடல்மார்க்கமாக இலங்கைக்கு

(UDHAYAM, COLOMBO) – கிராண்ட்பாஸ் பகுதியில் கைப்பற்றப்பட்ட 16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள், கடல்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

13 கிலோ ஹெரோயினுடன், கிராண்ட்பாஸ் – நாகலகம்வீதிய பகுதியில் நேற்று 37 வயதுடையை சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர், உந்துருளி ஒன்றில் கருப்பு நிற பயணப் பையில் குறித்த ஹெரோயினை கொண்டு சென்றுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டபோது, ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றுக்கொண்ட மூன்று கோடி ரூபா பணமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )