26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் மாதுரி

26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் மாதுரி

(UTV|INDIA)-இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். தேஸாப் படத்துக்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் தேஸாப் படத்தில்தான் இவர் பிரபலம் ஆனார். அந்த படத்தில் இடம்பெற்ற ஏக் தோ தீன் பாடல் இவரை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. அதே படத்தில் அனில் கபூர் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த ஜோடியும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனால் தொடர்ந்து இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்தனர். 20 படங்களுக்கு மேல் இவர்கள் சேர்ந்து நடித்திருந்தனர். பின்னர் திருமணமாகி மாதுரி சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்தான் அவர் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் அனில் கபூர் ஜோடியாக அவர் நடிக்கிறார்.

டோட்டல் தமால் என்ற காமெடி படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோவாக அனில் கபூரும் அவருக்கு ஜோடியாக மாதுரியும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனில் – மாதுரி இணைந்து பங்கேற்பார்கள் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரியில் படம் ரிலீசாகிறது.

 

 

 

 

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )