அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | SLMC யின் குச்சவெளி தவிசாளர் கைது!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக் கைது மற்றும் அவரது சகோதரர் அமீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் போட்டியில் போட்டியிட்ட ரிஸான் மீது விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்த காரணமாகவே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை போலிஸ் நிலையத்திலும், பிரதி போலீஸ் மா அதிபர் அலுவலகம் திருகோணாமலையிலும் முறைப்பாடு செய்து, வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று (25) காலை தவிசாளர் அவர்களும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 5 இலட்ச சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக் அவர்களினால், தமிழ் உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர்கள் நேற்று தெரிவிருத்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Related posts

வேகமாகப் பரவிவரும் வைரஸ் தொற்று – சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

editor

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை