உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இலஞ்ச வழக்கில் ரமித் ரம்புக்வெல்ல நேற்று (20) நீதிமன்றத்தால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி ரமித் ரம்புக்வெல்ல இன்று (21) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையான நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

மத்ரஸா மாணவன் கொலை: மெளலவிக்கும், ஏனையோருக்கும் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா