உள்நாடு

மீன்பிடி படகில் சோதனை – ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு – 5 பேர் கைது

இலங்கை கடற்படையால் தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் தொகையை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மீன்பிடி படகு இன்று (17) காலை சுற்றிவளைக்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விளைவாக போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்படுள்ளது.

அந்த மீன்பிடி படகில் இருந்த ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Related posts

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

இஷார செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்து வர நேபாளம் சென்ற STF அதிகாரிகள்!

editor