விளையாட்டு

தோனியின் கையுறையால் இந்தியா அணிக்கு பெனால்டி!

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் நேற்று இடம்பெற்ற அரைஇறுதியில் தோனி பயன்படுத்திய கையுறை களத்தடுப்பிற்கு இடையூறு ஏற்படுத்தியதால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

போட்டியின் 40-வது ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் பங்களாதேஷ் வீரர் மக்முதுல்லா அடித்து விட்டு ஓட்டமெடுக்க எடுக்க ஓடினார்.

அப்போது பந்தை பிடித்த  யுவராஜ்சிங் விக்கட் காப்பாளர் தோனி வசம் எறிந்தார்.

பொதுவாக இது போன்ற சமயத்தில் தோனி ஒரு கையுறையை (குளோவ்ஸ்) கீழே கழற்றி போட்டு விட்டு பந்தை பிடித்து ரன்-அவுட் செய்ய முயற்சிப்பது வழக்கம்.

அதே போலவே இந்த ஆட்டத்திலும் ஒரு கையுறையை கழற்றி போட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, விக்கட்டை நோக்கி அவர் வீசிய பந்து அருகில் கிடந்த கையுறையில் பட்டு விட்டது.

தலைக்கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்களை களத்தடுப்பிற்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒரு அணி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி இந்தியாவை தண்டிக்கும் (பெனால்டி) வகையில் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மாலை கூடுகிறது

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி